Numbers in Tamil

எல்லாருக்கும் வணக்கம்.

கொரோன வைரசால எல்லாரும் வீட்லேந்து வேலை பாக்குறீங்கனு நினைக்கிறேன். நானும் அப்படித் தான். என்னோட குடும்பத்தோட அதிக நேரம் செலவு செய்ய முடியுது. இந்த நேரத்தை வீணாக்காமல் உங்க குட்டிஸ்க்கு சின்னச் சின்ன விஷயங்களைக் கற்றுக்கொடுங்கள்  :)

எண்கள் மற்றும் எண்ணிக்கைகள்



இந்த போஸ்ட்ல நான் ஒன்று முதல் பத்து வரை இருக்கும் எண்களை உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சின்னப் பாடலோட சொல்லித்தரப்போறேன். அது மட்டும் இல்ல அவங்களுக்கு புடிச்ச மாதிரி வண்ணமிகு பணிப்புத்தகங்களும் தயார்.

ஒன்று - தலை 

இரண்டு - கண்கள் 





மூன்று  - முக்காலி 
நான்கு - நாற்காலி 

ஐந்து - விரல் ( ஒரு கை )

ஆறு - ஈயின் கால் 

ஏழு - வாரத்தின் நாட்கள்

எட்டு - சிலந்திக்  கால் 

ஒன்பது- தானியம் 

பத்து - இருகை விரல் 


இந்த வண்ணமயமான பணிப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்து கொண்டு laminate செய்து வைத்துக் கொள்ளுங்கள். 

பாடல்:


ஒன்று யாருக்கும் தலை ஒன்று;
இரண்டு முகத்தில் கண் இரண்டு;
மூன்று முக்காலிக்கு கால் மூன்று;
நான்கு நாற்காலிக்குக் கால் நான்கு;
ஐந்து ஒருகை விரல் ஐந்து;
ஆறு ஈயின் கால் ஆறு;
ஏழு வாரத்தின் நாள் ஏழு;
எட்டு சிலந்திக்கு கால் எட்டு;
ஒன்பது தானிய வகை ஒன்பது;
பத்து இருகை விரல் பத்து.


இந்த பாடலை நான் கீழே பாடி பதிவு செய்துள்ளேன். அதைக் கேட்டு தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யவும். 

https://anchor.fm/sri-g/episodes/Rhymes-for-Toddlers-in-Tamil-ebs6fq

தமிழை activity மூலமா எப்படி சொல்லித் தரலாம்னு யோசிச்சிட்டு இருக்கும் பெற்றோர்களுக்கு , கீழே உள்ள என்னுடைய FB குரூப்பில் சேர்ந்து கொள்ளவும். என் மகனுடன் நான் செய்யும் activity களை இதில் பகிர்ந்து வருகிறேன். நன்றி .

https://www.facebook.com/groups/tamiltoddlers/

Youtube சேனல் :

https://www.youtube.com/channel/UCzS9zYkEz8LUpwN9VQd7HuA/


உங்களுக்கு இந்தப் பணிப்புத்தகங்கள் வேண்டும் என்றால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

ID : digitalgsridevi@gmail.com











Comments