தமிழ் தோட்டம்


அனைவருக்கும் வணக்கம்.
என் பெயர் ஸ்ரீதேவி . எனக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். என் திருமணத்திற்குப் பின் வேலை நிமித்தமாக பெங்களூரில் வசித்து வருகிறேன். என் அப்பா தமிழ் ஆசிரியர் என்பதால் சிறு வயது முதல் தமிழ் மீது ஒரு தனி ஈர்ப்பு உண்டு. எனக்கு தமிழ் மீது இருக்கும் ஈர்ப்பைப் போல   என் மகனுக்கும்  ஆர்வம் வர வேண்டும் என்ற நோக்கத்தில் சில பணிப்புத்தகங்களை தயார் செய்து வருகிறேன். முதலில் உயிர் எழுத்துக்களுடன் ஆரம்பித்து உள்ளேன். அவனிடம் விளையாட்டாக இதைக்கொடுத்து தினமும் செய்து பயிற்சி செய்து வருகிறேன். இதை தங்கள்  குழந்தைகளிடமும், அனைவரிடமும் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். தங்களுக்கு ஏதேனும் சிறப்பு பணிபுத்தகங்கள் தேவைப்பட்டால் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். என் பணிப்புத்தகங்கள் பிடித்தால் என் blog-ஐ subscribe செய்யவும். 

நன்றி !


Comments