Corona virus Tamil post

இப்போ ரொம்ப hot topic ஆன கொரோனா வைரஸ் பத்தி ஒரு சில முக்கிய tips உங்களுக்காக.

corona virus என்றால் என்ன?

  corona virus என்றால் ஒரு family virus  (அதாவது நிறைய வைரஸ்களைக்கொண்டது)


இது எப்படி பரவும் ?


சுவாச சுரப்பிகள் (அதாவது respiratory secretion ) மூலம் பரவும். நமக்கு ஏற்படும் தும்மல்,இருமல் போன்றவற்றால் இந்த வைரஸ் பரவுகின்றது. ஒரு உதாரணத்திற்கு , corona வைரஸ் பாதித்த நபர் தொட்ட கதவையோ இல்லை கதவின் handle போன்றவற்றை நாம் தொட்டுவிட்டு நம்மை அறியாமலேயே முகத்தில் கையை  வைத்தால் நமக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்?

இந்த COVID-19 என்ற வைரஸினால் நமக்கு மூச்சு திணறல், இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்படலாம். பாதிப்புகள் அனைத்தும் அவரவர் உடலின் immunity-ஐ மற்றும் வயதைப் பொறுத்து வேறுபடும் .

இதைப் போன்று பாதிப்புகள் நமக்கு தோன்றினால் என்ன செய்ய வேண்டும் ?

உங்கள் area -வில் affect ஆகிய மக்கள் யாரேனும் இருந்தால் , அவர்களுடன் நீங்கள் இந்த 2 வாரத்தில் பேசி இருந்தாலோ அல்லது கை குலுக்கி இருந்தாலோ நீங்கள் என்னென்ன செய்யலாம்: 

  • உடனே மருத்துவப் பராமரிப்பு பெற்றுக்கொள்ளவும். மருத்துவரிடம் தாங்கள் சமீபத்தில் வெளிநாடு ஏதேனும் சென்றிருந்தால் அதைப் பற்றி மேலும் தங்களின் பாதிப்புகள் பற்றி விரிவாகக்  கூறவும். 
  • மற்றவர்களிடமிருந்து கொஞ்ச தூரம் தள்ளி நின்று பேசவும் ( minimum 3 feet )
  • தேவை இல்லாத பயணங்களை ரத்து செய்யவும்.
  • இருமல் அல்லது தும்மல் வரும் போது kerchief அல்லது tissue வை பயன் படுத்தவும், தங்களின் கைகளை அல்ல.
  • soap வைத்து கைகளை minimum 20 second நன்றாக தேய்த்துக் கழுவவும்.தண்ணீர் இல்லை என்றால் Alcohol based sanitizer பயன் படுத்தவும்.

இதை வருமுன் காக்க சிறந்த வழிமுறைகள் என்ன ?

  • soap வைத்து கைகளை minimum 20 second நன்றாக தேய்த்துக் கழுவவும்.தண்ணீர் இல்லை என்றால் Alcohol based sanitizer பயன் படுத்தவும்.
  • இருமல் அல்லது தும்மல் வரும் போது kerchief அல்லது tissue வை பயன் படுத்திவிட்டு அதை உடனே குப்பைத்தொட்டியில் போடவும்.
  • தங்களின் முகத்தை முடிந்த அளவு தொடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். கைகளை நன்கு தேய்த்து கழுவிய பிறகு முகத்தை தொடவும்.
  • அடிக்கடி தொடும் சாமான்களை துடைத்து அல்லது disinfect (கிருமிகளை நீக்க சுத்தமாக துடைக்கவும் )செய்யவும்.

குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்வது ?

  • குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகளை நன்கு சோப்பு தண்ணீரில் ஊற வைத்துக் கழுவவும். 
  • கழுவ முடியாத பொம்மைகளை கொடுக்காமல் இருப்பது நல்லது.
  • நிறைய பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளைக் கொடுக்கவும்.
  • முடிந்த வரை கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.
  • சொந்த வாகனங்களை பயன்படுத்துதல் மிகவும் நல்லது.
  • வெளியே சென்று வந்தவுடன் கைகளை நன்றாக தேய்த்துக் கழுவி விடவும்.
  • உடம்பு சரி இல்லை என்றால் உடனே மருத்துவ ஆலோசனை பெறவும்.
  •  பள்ளி மற்றும் daycare செல்வதை 100 சதவீதம் தவிர்க்கவும்.
  • குழந்தைகள் அடிக்கடி முகத்தில் கை வைப்பதை தவிர்க்க கற்றுக்கொடுக்கவும் .

இந்த வைரஸ் எவ்வளவு ஆபத்தானது ?

Experts இதைப்பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறார்கள். வயதானவர்கள் மற்றும் preexisting conditions இருப்பவர்கள் அனைவரும் high risk zone-ல் உள்ளார்கள்.




இந்த blogpost-ல்  எந்த மருத்துவ ஆலோசனை தரப்படவில்லை. இதை யாரும் மாற்ற அனுமதி இல்லை .corona பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த என் சிறிய முயற்சி.
Ref: https://www.nationwidechildrens.org/family-resources-education/700childrens/2020/01/novel-coronavirus

நன்றி !


இந்த வைரஸ் பற்றி latest தகவல்களை கீழே உள்ள link மூலம் பெறவும்

https://anchor.fm/sri-g/episodes/Corona-Post-in-Tamil-ec0l08






Comments

Post a Comment