உங்கள் குழந்தை திட உணவுக்குத் தயாரா ?
புது அம்மாக்களுக்கு இந்தக் கேள்வி மற்றும் இதைச் சுற்றி நிறைய சந்தேகங்கள் உள்ளன.
எப்போ உங்க குட்டி வாண்டுங்க தயார்னு கண்டுபிடிக்கிறது ?
1. உங்கள் குழந்தையின் கழுத்து நின்றுவிட்டால் அவர்களால் உணவை ஏற்றுக்கொள்ள மற்றும் விழுங்க முடியும்.
2. குழந்தைக்கு உட்கார தெரிய வேண்டும் ( with or without support )
3. மற்றவர்கள் சாப்பிடுவதை மிக ஆர்வமாக பார்த்தால்.
4. வாயைத் திறக்கத் தெரிந்தால் (உணவை அருகில் எடுத்து வரும்போது )
5. தாய்ப்பால் அல்லது பாட்டில் பால் கொடுத்த பின்னும் பசி எடுப்பது போலத் தெரிந்தால்.
எப்படி ஆரம்பிக்க வேண்டும் ?
அனைத்தையும் முன்னரே திட்டம் தீட்டி வைப்பது மிக முக்கியம். உங்களுக்கு மற்றும் உங்கள் குழந்தைக்கு ஏற்ற அட்டவணைத் (Schedule ) தயார் செய்யுங்கள். இதெல்லாம் முன்னர் அவர்களின் குழந்தை நல மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம் . நான் என் குழந்தையின் குழந்தை நல மருத்துவரிடம் காட்டிவிட்டு 6 மாதத்தில் திட உணவை ஆரம்பித்தேன் .
தங்களுக்காக சில டிப்ஸ் :
1.எப்பொழுதும் ஒரே உணவுடன் ஆரம்பியுங்கள். அது ஒரு காய்கறி அல்லது பழமாக இருக்கலாம் .
2. முதலில் பழத்துடன் ஆரம்பிப்பது நல்லது . ஏனெனில் பழங்கள் எளிதில் செரித்துவிடும் .
3. ஒரு வாரத்திற்கு ஒரே நேரத்தில் ஒரே உணவைக் கொடுங்கள்.
உதாரணத்திற்கு : நீங்கள் உங்கள் குழந்தைக்கு வாழைப்பழம் முதலில் கொடுக்க ஆரம்பித்தால் அதனுள் இருக்கும் கருப்பு வித்துக்களை நீக்கிவிட்டு , காலை 10 மணிக்குக் கொடுத்தீர்கள் என்றால் அதன் மறுநாளும் அதே போல 10 மணிக்கு கொடுத்து விடுங்கள்.
4. அதற்கு அடுத்த வாரம் ஒரு காயைத் தேர்ந்தெடுங்கள் . அதை நன்கு வேக வைத்து மசித்துக் கொடுக்க ஆரம்பியுங்கள்.
5. 6 முதல் 7 மாதக் குழந்தை 1 டீ ஸ்பூன் அளவு மசித்த உணவை உண்பார்கள். ஒரு மாதத்திற்கு ஒரு முறை அளவைக் கூட்டலாம்.
உங்களுக்கான சில டிப்ஸ் இதோ :
1. பிளாஸ்டிக் கின்னத்தை தவிருங்கள். எவர்சில்வர் அல்லது கண்ணாடிப் பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள்.
2. உங்களுடைய மடியில் அல்லது highchair- ல் உட்கார வைத்து அமைதியான சூழலில் உணவு கொடுங்கள்.
3.கண்டிப்பாக phone அல்லது tablet போன்றவற்றை தவிருங்கள். குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்று தெரிந்து சாப்பிட்டால் உணவு மேல் தானாக ஈடுபாடு வரும்.
4.குழந்தைகளிடம் நிறைய பேசுங்கள் . உதாரணத்திற்கு நீங்கள் காரட் வேக வைத்துக் கொடுத்தால் , நீங்க இன்னிக்கு கேரட் சாப்புடுறீங்க . காரட் ஆரஞ்சு கலர்ல இருக்கும். முயல் குட்டிக்கு காரட் ரொம்பப் புடிக்கும். (முயல் போல action செய்து காட்டலாம். )

பழங்களின் அட்டவணை
1
|
வாழைப்பழம்
|
நன்கு மசித்துக் கொடுக்கவும்
|
2
|
ஆப்பிள்
|
வேக வைத்து மசிக்கவும்
|
3
|
பேரிக்காய் (Pear )
|
வேக வைத்து மசிக்கவும்
|
4
|
சப்போட்டா
|
தோல் நீக்கி நன்கு மசித்துக் கொடுக்கவும்
|
5
|
பப்பாளி
|
நன்கு மசித்துக் கொடுக்கவும்
|
காய்களின் அட்டவணை
1
|
காரட்
|
வேக வைத்து மசிக்கவும்
|
2
|
பீட்ரூட்
|
வேக வைத்து மசிக்கவும்
|
3
|
சக்கரைவள்ளிக்கிழங்கு
(sweet potato )
|
வேக வைத்து மசிக்கவும்
|
4
|
பூசணிக்காய்
|
வேக வைத்து மசிக்கவும்
|
5
|
உருளைக்கிழங்கு
|
வேக வைத்து மசிக்கவும்
|
மேல உள்ள இரண்டு அட்டவணையும் நீங்கள் உங்களுக்குத் தகுந்தாற்போல மாற்றிக்கொண்டு செய்யலாம் .
Comments
Post a Comment