இப்போ நீங்க எல்லாரும் உயிர் எழுத்து, மெய் எழுத்து மற்றும் ஆய்த எழுத்து பற்றித் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அடுத்தது உயிர் மெய் எழுத்து பற்றிக் கற்றுக்கொள்வதற்கு முன், தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை வகைப்படும்னு பார்க்கலாம்.
குறில் எழுத்து என்றால் என்ன?
குறுகிய ஓசை உள்ள எழுத்து குறில் எழுத்து ஆகும்
நெடில் எழுத்து என்றால் என்ன?
நீண்ட ஓசை உள்ள எழுத்து நெடில் எழுத்து ஆகும்
உயிர் எழுத்தையும் மெய் எழுத்தையும் சேர்த்தால் நமக்குக் கிடைப்பது உயிர்மெய் எழுத்து ஆகும்.
உதாரணம்: க் + அ = க
அ- உயிர் எழுத்து
க்- மெய் எழுத்து
க- உயிர்மெய் எழுத்து
இந்த 247 எழுத்துக்கள் தவிர்த்து மேலும் 6 எழுத்து உள்ளன, அவை என்ன என்று பார்ப்போமா !
கிரந்த எழுத்துக்கள் என்றால் என்ன?
சமஸ்கிருத மொழியிலிருந்து தழுவப்பட்ட எழுத்துக்கள் கிரந்த எழுத்துக்கள் ஆகும்.
அடுத்த போஸ்ட்ல மேலும் பல தகவல்களோட சந்திக்கிறேன், நன்றி!
Like, Share and Subscribe :
Facebook Page : https://www.facebook.com/Tamilworksheets
Twitter : https://twitter.com/sidheesla
Instagram : https://www.instagram.com/sridevi._g
Anchor Podcast : anchor.fm/sri-g
Comments
Post a Comment