Fine motor Skills | Importance | Activities


என்னடா இது நேத்து தான் பொறந்த மாதிரி இருக்கான் , அதுக்குள்ள வளந்துடானே ! இந்த மாதிரி எத்தனை பேர் நெனச்சுட்டு இருக்கீங்க. நானும் உங்கள மாதிரி தான். பிறந்த குழந்தை அதிகம் தூங்குவாங்க, அழுவாங்க , பால் குடிப்பாங்க , poop செய்வாங்க, திருப்பி இதே மாதிரி continue ஆகும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவங்க கைகள விரிக்க ஆரம்பிப்பாங்க , விரல் எல்லாம் அசைப்பாங்க, அதுக்கு அப்பறமா தேடுதல் தான். அதாவது exploration.

Gross motor development பத்தி உங்களுக்காக ஒரு போஸ்ட் போட்ருந்தேன்.
அந்த post கீழ உள்ள லிங்க்ல இருக்கு .

https://tamilworksheets.blogspot.com/2020/04/gross-motor-development-their.html

இப்போ Fine motor skills பத்தி பாக்கலாம்.

சரி   Fine motor skills னா என்ன ?

நம் குழந்தைகளின் கைகளில் இருக்கும் சிறு தசைகளின் உதவியுடன் செய்யும் விஷயங்கள் தான் Fine Motor skills. கை என்றால் நம்முடைய உள்ளங்கை,  விரல்கள் மற்றும் மேற்கை என அனைத்தும் அதனுள்ளே அடங்கும்.

இதன் முக்கியத்துவம் என்ன?

இதன் மூலம் குழந்தைகள் எப்படி ஒரு வேலையை திறம்படச் செய்கிறார்கள், அந்த வேலையை எவ்வளவு வேகத்தில் செய்கிறார்கள்  அவர்களுக்கு நாம் எப்படி வழிகாட்ட வேண்டும் எனத்  தெரிந்து கொள்ளலாம். Fine motor skill என்பது பல தனித்தனியாக செய்ய கூடிய வேலையை எப்படி ஒன்றாகச் சேர்த்து திறம்பட செய்து முடிக்க வேண்டும் என்பதற்கான ஒரு பயிற்சி எனக் கூறலாம்.

எதெல்லாம் Fine Motor Skills உள்ளே அடக்கம் ?  

  1. பென்சில் மற்றும் பேனாவைப் பிடிப்பது  
  2. கத்திரிக்கோல் பயன்பாடு 
  3. பொம்மைகளுக்கு டிரஸ் செய்வது 
  4. Building Blocks வைத்து விளையாடுவது.
  5. பல் துலக்குவது, குளிப்பது போன்ற விஷயங்கள் 
  6. காலணிகளை அணிந்து கொள்வது 
  7. ஷர்ட் பட்டன் போடுவது 
  8. ஷூ lace கட்டுவது.

என்னடா இது எல்லாம் சின்ன விஷயம் தானேனு யோசிக்குறீங்களா ? 
பெரியவர்களாகிய நமக்கு தான் சாதாரண விஷயம் , குழந்தைகளுக்கு இவை எல்லாம் ஒரு பெரிய விஷயம் . :D  நம் குழந்தைகள் கிறுக்கல்களில் ஆரம்பித்து ஒரு ஓவியத்தை அழகாக வரைய இந்த Fine motor skill அவசியமான ஒன்று.

Fine motor skill ற்கு நாம் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ?

நம் அன்றாட கடமைகளைச் செய்ய Fine motor skill என்பது மிக முக்கியமான ஒன்று . குழந்தைகள் தானாக அவர்களின் வேலைகளை செய்ய ஆரம்பிப்பது அவர்களுக்கு ஒரு தனித்தன்மையை தருகின்றது. இதனால் அவர்களின் சுய மரியாதை (Self-esteem) மற்றும் நம்பிக்கை கூடுகின்றது. இதெல்லாம் கஷ்டப்படாமல் எளிதில் அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால்  Fine Motor skill அவசியமானது.

உங்கள் குழந்தைகளுடன் செய்யக் கூடிய எளிய activity கள்:

1. செய்தித்தாள் கிழிப்பது 
2. ஒரு தாளில் நேர் கோடு போட்டு அவர்களை வெட்டச் செய்வது.
3. துணிகள் காயப்போடும் பொது கிளிப் அவர்களை போட்டாச் செய்வது 
4.களி மண் அல்லது சப்பாத்தி மாவு கொடுத்து உருட்டி வடிவங்களை தயார் செய்யச் சொல்வது 
5. ஒரு தாளில் அவர்களின் விரலால் paint மூலம் கிறுக்கச் செய்வது. 
6. உண்டியலில் காசுகளை போடச் செய்வது.

உங்களுக்கு இதைப் போன்று activity எப்படிச் செய்வது என சந்தேகம் இருந்தால் comment section-ல் பதிவு செய்யவும்.


மேலே கூறிய அனைத்து activityகளை  குழந்தைகள்  செய்யும் போது கண்டிப்பாக பெற்றோர் அல்லது பெரியவர்களின் கண்காணிப்பில் தான் செய்ய வேண்டும்.

நான் செய்த சில activity களை கீழே உள்ள  YouTube channel-ல் பதிவு செய்து வருகிறேன் , உங்களுக்கு பிடித்திருந்தால் Subscribe செய்யவும் :



நன்றி !






















Comments