Earth day Special post April 22

ஒரு சிறப்பு போஸ்ட் இன்றைக்கு !

நம்ம தாத்தா பாட்டிலாம் அடிக்கடி பழமொழி சொல்லுவாங்க , அப்படி நம்ம தெரிஞ்சுக்கிட்ட முக்கியமான பழமொழி "பொறுத்தார் பூமி ஆள்வர் ", பொறுமையா இருந்தா  இந்த பூமியை ஆளுவோம்னு அர்த்தம். அப்படினா எல்லாவற்றையும் விட மிக மிக பொறுமை காப்பது யார்? நம்ம பூமித்தாய் தான் . இன்னிக்கு நம்ம பூமித்தாயை கொண்டாடும் விதமா Earth day என்று கொண்டாடுகிறோம். அதாவது பிரதி வருடம் ஏப்ரல் 22 பூமித்தாயின் நாள்.



இதைப் பற்றி நம்ம வருங்காலத்தின் பிரஜைகளுக்கு
(நம் குழந்தைகளுக்கு) எப்படி சொல்லித்தரலாம்னு ஒரு சில விஷயங்களை பகிர்ந்துக்குறேன்.

சரி , இதெல்லாம் சொல்லித்தரணுமா ? அவ்ளோ முக்கியமான விஷயமானு கேக்குறீங்களா ?

கண்டிப்பா சொல்லிக்கொடுக்கணும். இந்த உலகத்துல புதிய யோசனைகள வெச்சு மாற்றம் அப்டினு கொண்டு வர முடியும், அது நம் அடுத்த தலைமுறையால மட்டும் தான் முடியும். அதனால தான் அவர்களுக்கு பூமியைப் பற்றி மற்றும் எப்படி நம்ம பூமியை ஆரோக்கியமா வெச்சுக்கணும்னு சொல்லித்தரது ரொம்ப முக்கியம் .

என்ன Activities லாம் செய்யலாம் ?

  • வீட்லயே இருக்குறதுநால மின்சாரம் மற்றும் நீர் எப்படி பயன்படுத்தனும்னு சொல்லிக்குடுங்க. 

          3 வயதான என் மகனுக்கு நான் எப்படி சொல்லிக்குடுக்குறேன்னா ஒரு அறையை விட்டு வெளில வந்த மின்விசிறி (FAN ) ஆஃப் செய்யனும் . பகல்ல வெளிச்சம் அதிகமா இருக்குறதுனால லைட் தேவைப்படறது இல்ல.

  • செடி நட்டு அதன் பராமரிப்பு முறைகளை சொல்லித்தரலாம். 
  • பூமியின் படம் வரைந்து வண்ணம் தீட்டச் சொல்லாம்.
  • விலங்குகள் , பறவைகள் பாதுகாப்பது, அவைகளைத் துன்புறுத்தாமல் இருப்பது பற்றி உங்கள் சொந்த வார்த்தைகளில் கதைகளாக கூறலாம்.
  • பிளாஸ்டிக் பதில் வேறு alternatives பயன் படுத்த முயற்சி செய்யலாம் .(பெரியவர்களாக நம் முயற்சி)
  • கண்டங்கள்(Continent ) மற்றும் கடல்கள் பற்றிச் சொல்லிக்கொடுங்கள்.



இந்த ஒரு நாள் மட்டும் இல்லாமல் வருடத்தின் அனைத்து நாட்களையும் நாம் Ea rth day எனக்கருதி நம் பூமியைக் காக்க நம்மால் இயன்ற அளவு முயற்சி செய்வோம் என உறுதி மொழி எடுத்துக்கொள்வோம்.







Comments