Rhythm for kids

நாம் எப்பொழுதும் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே இருக்கிறோம் , மூச்சை வெளியே விடுகிறோம். நம் இதயம் துடித்துக் கொண்டே இருக்கிறது. சூரியனைப் பின் தொடர்ந்து நம் நாட்கள் பயணித்துக் கொண்டே இருக்கின்றது. காலை, மதியம், மாலை, இரவு . மீண்டும் அதே தொடரும். நீங்கள் எந்த நாட்டில் வசிக்கின்றீர்களோ அதற்கு ஏற்றார் போல உங்கள் பருவங்கள் மாறும். நம் இயற்கையிலேயே நாம் இந்தச் சீர்ப்பிரமாணத்தைக் (rhythm) கற்றுக்கொள்ள வேண்டும். இது முற்றிலும் இலவசம் மற்றும் இவை அனைத்தும் நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள்.

நான் பேசுறது ஒன்னும் புரியலையா ?
 மேல படிங்க. உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் உங்கள் வாழ்விலும் ஒரு நல்ல விஷயம் நீங்கள் செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்கு  Rhythm தயார் செய்யுங்கள். உங்கள் தினசரி செயல்கள் மற்றும் Rhythm உங்கள் குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும். இந்த கடினமான வாழ்க்கை நடைமுறையில் நாம் நம் குடும்பத்தை முதன்மைபடுத்துதல் மிக அவசியம்.

(Rhythm - எப்போ எதை செய்யனுமோ அதை அப்போ செய்ய வைப்பது  )

பெற்றோர்களே , உங்கள் குழந்தைகள் அனைவரும் உங்களின் Rhythm -ல் தான் வாழ்கிறார்கள். இந்த Rhythm என்கிற விஷயம் மட்டும் நம்ம குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து விட்டால் நம் வாழ்க்கையில் நாம் பெரிய சாதனை செய்துவிட்டோம் என்று சந்தோஷப் பட்டுக்கொள்ளுங்கள். நாம் வாழ்ந்து தான்  அவர்களுக்கு வாழக் கற்றுக்கொடுக்கிறோம். இந்த Rhythm என்பதை குழந்தைகளுக்குப் பழக்க ஒரு சிலருக்கு மிகக் கடினமாக இருக்கும், மேலும் சிலருக்குச் சுலபமாக இருக்கும். ஆனால் நீங்கள் அதை ஒரு முறையாவது முயற்சி செய்து பின்பற்றினால், சூரிய உதயம் மறைவு போல நம் வாழ்க்கையில் அது நிலைத்து இருக்கும்.

எதோ சொல்லி குழப்புவது போலத் தெரிகிறதா?
உங்கள் அனைவருக்கும் சில டிப்ஸ் இதோ :
  • உங்கள் குழந்தைகளை தினமும் காலை கனிவானப்  பேச்சுக்களுடன் எழுப்புங்கள்.
  • அவர்களுடன் உட்கார்ந்து காலை உணவை நிதானமாகச் சாப்பிடுங்கள்.
  • முன் தினமே அவர்களின் ஆடை மற்றும் அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்க உதவுங்கள்.
  • காலையில் உங்கள் வீட்டிலிருந்து தினமும் ஒரே நேரத்தில் கிளம்புங்கள். இதனால் உங்கள் குழந்தைகள் பள்ளியில் எதையும் இழக்காமல் அவர்களின் வேளைகளில் எளிமையாக ஆரம்பிப்பார்கள்.
  • தினமும் அவர்களை பள்ளியிலோ அல்லது பள்ளிப் பேருந்திலோ விடும் பொழுது உங்களின் முழு கவனத்தையும் அவர்கள் மேல் செலுத்துங்கள். அவர்கள் இதனால் பாதுகாப்பாக உணர்வார்கள்.
  • அதே போல அவர்களை மாலை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரும் போது அவர்களை அரவணையுங்கள். குழந்தையின் சந்தோஷம் அவர்களது கண்களில் வெளிப்படும்.

இந்த Rhythm பதின்பருவ வயதினர்களுக்கும் மற்றும்  பெரியவர்களுக்கும் பொருந்தாது என்று நினைக்க வேண்டாம். இந்த rhythm என்பது சிறிய வயதிலிருந்து பின்பற்ற ஆரம்பித்து விட்டால் தானாக அதைப்  பெரியவர்கள் ஆனதும் பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள்.  (நாமும் அனாவசிய பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் )

சும்மாவா சொன்னாங்க ! ஆறு மாசம் வரைக்கும் அசடியும் வளத்துடுவானு !




நன்றி ! 




















Comments