எல்லாருக்கும் என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
உலகத்தமிழர்கள் அனைவரும் சித்திரை மாதம் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவர். புராணக் காலத்தில், படைக்கும் கடவுளான பிரம்மா இந்த உலகத்தை முதலில் படைக்க ஆரம்பித்தார் என்பது வரலாறு. இந்த நாளில் தான் மதுரை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்ததாகவும் கூற்று உள்ளது.
அனைவரும் காலை எழுந்ததும் முதல் வேலையாக கன்னி என்றுக் கூறி புனிதமான பொருட்களைப் பார்த்து அவர்களின் நாட்களைத் துடங்குவர். அந்த ஆண்டு முழுவதும் நல்ல அதிர்ஷ்டமாக இருக்கும் என்ற நம்பிக்கை. கன்னியில் பொதுவாக வைக்கப்படும் பொருட்கள் : வெற்றிலை, பாக்கு,பூ, பழம், தங்கம், வெள்ளி, அரிசி, தேங்காய் போன்றவை. அவரவர்களின் வசதிக்கேற்ப அது வேறுபடும். புனிதப் பொருட்களைப் பார்த்துவிட்டு மங்கள ஸ்னாநம் செய்துவிட்டு அருகில் உள்ள கோவிலில் சென்று கடவுளை தரிசித்துவிட்டு வருவார்கள். அதன் பின்னர் புதிய பஞ்சாங்கத்தை வாசிப்பார்கள்.
வீட்டை சுத்தம் செய்து வாசலில் மாத்தோரணம் கட்டி அழகழகாக பல வண்ணத்தில் கோலம் போட்டு விதவிதமாக சமைத்து உண்பார்கள். இந்த நாளின் மிக முக்கியமான உணவு அறுசுவைப் பச்சடி.
இனிப்பு, புளிப்பு,கசப்பு ,உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு.
மாங்காய் ,வேப்பம்பூ, உப்பு,புளி,வெல்லம், கார்ப்பிற்கு எதாவது ஒரு பொருளைச் சேர்த்து இந்தப் பச்சடி செய்வர்.வாழ்க்கையில் நம் சந்தோசம் மற்றும் துக்கம் அனைத்தையும் ஒரே மாதிரி உபசரிக்க வேண்டும் என்பதை மறைமுகமாக தெரியப்படுத்துகின்றனர்.
இந்த வருடம் COVID-19 (கொரோனா வைரஸ்) காரணமாக பல வெளியே கோவில்களுக்குச் செல்ல முடியவில்லை என்பதால் உங்கள் வீட்டில் குடும்பத்தினர் அனைவருடனும் நன்றாகச் சமைத்து அதைப் பொறுமையாக ருசித்துச் சாப்பிடுங்கள். "வீடே கோவில் " என்று உங்கள் வீட்டில் அனைவரும் பத்திரமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுங்கள்.

Comments
Post a Comment