வீட்டிலிருந்து வேலை செய்துகொண்டிருக்கும் பெற்றோர்களுக்கான பதிவு இது.
1. உங்களுடைய எதிர்பார்ப்புகளை சரியாக வைத்துக்கொள்ளுங்கள். சிறிய குழந்தைகளையும் உங்கள் அருகில் வைத்துக்கொண்டு உங்களுடைய உற்பத்தித்திறனை அதிகப்படுத்த முடியாது. உங்கள் மேல் கொஞ்சம் கருணைப் பட்டுக்கொள்ளுங்கள். மேலும், உங்களுடன் வேலை செய்பவர்களிடமோ அல்லது உங்களின் மேல் அதிகாரியிடமோ தாங்கள் பகலில் செய்ய முடியாத வேலைக்கு நிச்சயம் வேறு நேரத்தில் (odd time ) ஈடுசெய்வேன் என்று முன்னரே கூறிவிடுங்கள். உங்களுடைய குழந்தைகள் பெரியவர்கள் என்றால் அவர்களிடம் வேலை இருக்கிறது என்று கூறிவிடுங்கள்.
2. வீட்டில் இருவரும் வேலை செய்தால் , யார் எப்பொழுது வேலை செய்வார்கள் (இருவரின் meeting விவரம்) என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் நாளை முன்கூட்டியே நீங்கள் திட்டம் தீட்டி வைத்துக்கொள்ள வேண்டும். யார் யார் எந்தெந்த வீட்டு வேலைகளைச் செய்வர் என்று இருவரும் பகிர்ந்துகொண்டு வேலை செய்ய வேண்டும்.
3. வீட்டில் தானே வேலை செய்கிறோம் என்று மெதுவாக எழாமல், வழக்கம் போல சீக்கிரம் எழுந்து காலைக்கடன், சமையல், குழந்தைகளை தயார் செய்வது என்று அனைத்தையும் முன்கூட்டியே திட்டம் தீட்டி அதன்படி நடந்துகொள்ளுங்கள். குழந்தைகளை எப்படி விளையாட்டில் ஈடுபடுத்துவது (engage செய்வது ) என்று யோசித்துக்கொள்ளுங்கள். Screen Time என்பது இப்போது இருக்கும் சூழலில் மிக அவசியமாகிவிட்டது(20 நிமிடம் காலை, 20 நிமிடம் மாலை ). கொஞ்சம் அதிக நேரம் விடியோக்கள் பார்த்தால் உங்கள் மேல கடிந்து கொள்ளாதீர்கள். அவர்களும் பள்ளி செல்வது,நண்பர்களுடன் விளையாடுவது என்று அனைத்தையும் miss செய்கின்றனர். அவர்களை Podcast அல்லது இலவச ebook கேட்பதற்கு கற்றுக்கொடுத்துவிடுங்கள்.
4. முன்தினம் இரவே என்ன சமைக்க வேண்டும் என்ன தின்பண்டங்கள் கொடுக்கலாம் என்று திட்டம் தீட்டிக்கொண்டால் ,உங்கள் வேலை மிகச் சுலபமாகிவிடும்.
5. உடற்பயிற்சி என்பது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இந்த சூழலில் மிக முக்கியமானது. நிறைய விடியோக்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் குட்டீஸ்களுடன் நீங்களும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
இப்போதைக்கு நம் அனைவரின் எண்ணமும் ஒன்று தான். வீட்டில் இருந்தபடி நம் வேலைகளைத் திறம்படச் செய்து அனைவரும் ஒன்றுகூடி கொரோனா வைரஸை பரவவிடாமல் தடுப்போம்.
இப்போது இருக்கும் சூழலில் விலகியிருந்தால் உண்டு வாழு !
Hi,
ReplyDeleteTent for Growth is a tamil blog. Your support also needed.