நிறங்கள் மற்றும் வடிவங்களின் முக்கியத்துவம்

நீங்கள் அனைவரும் எப்பொழுதாவது இந்த யோசித்தது உண்டா. ஏன் நம் குழந்தைகளுக்கு வடிவங்கள் மற்றும் நிறங்களைப் பற்றி சொல்லிக்கொடுக்க வேண்டும் ? அதன் முக்கியத்துவம் என்ன? இதெல்லாம் எப்பொழுது ஆரம்பிக்க வேண்டும் ?




நம் உலகம் முழுவதும் நிறங்கள் மற்றும் வடிவங்களால் ஆனாது. அதாவது நம் வீட்டை எடுத்துக்கொள்ளுங்கள். தபால்காரருக்கு அடையாளம் எப்படிக் கொடுப்போம் ? அந்த மஞ்ச கலர்ல பெயிண்ட் அடிச்ச வீடு.. என்று தானே! 
நம்மைச் சுற்றி இருக்கும் மரம், பூ, பொருட்கள் என அனைத்தும் பல வித நிறங்களினால் ஆனது. நிறங்கள் மற்றும் வடிவங்கள் என்பது நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. 

Importance of Shapes
நாம் பொருட்களை வகைப்படுத்த வேண்டும் என்றால் வடிவங்கள் மற்றும் நிறங்கள் பெயர்களைத் தெரிந்து கொள்வது மிக அவசியமானதாகி விட்டது. கொஞ்சம் வளர வளர நம் குழந்தைகளும் ஒரு சிகப்பு நிற ஆப்பிளில் இருந்து மஞ்சள் நிற வாழைப்பழத்தை வித்தியாசமாக பார்ப்பார்கள். ஏனெனில் , வாழைப்பழம் கொஞ்சம் நீட்டமாக இருக்கும், ஆப்பிள் சற்று உருண்டையாக இருக்கும்.

சரி, விஷயத்திற்கு வருவோம். ஏன் சொல்லிக்குடுக்கனும் ?

வாய்மொழித்தொடர்பு :

 நம் குழந்தைகள் வளர ஆரம்பித்ததும் மெல்ல மெல்ல நடை,பேச்சு என ஒன்றொன்றாக கற்றுக்கொள்வார்கள்.அப்பொழுது அவர்கள் பேசுவதற்கு வார்த்தைகளைத் தேடுவார்கள். நிறங்களைப் பற்றி கற்றுக்கொடுப்பது என்பது அவர்களின் வாய்மொழித்தொடர்பை அதிகரிக்கும். மேலும் அவர்களுக்கு நிறங்களை நம்மால் வகைப்படுத்தி காட்ட முடியும். ஆரஞ்சு, மஞ்சள் என அதற்கேற்றாற்போல பொருட்களை முன் வைத்து காட்டலாம்.

வகைப்படுத்துதல்:

பொருட்களை வகைப்படுத்தும் திறன் என்பது அதிகரிக்கும். ஒரு சதுர வடிவத்தினுள் வட்டம் போகுமா இல்லையா ? என்பதைப்பற்றி வளர வளர அவர்கள் கற்றுக்கொள்வார்கள். என்னை நம்புங்கள், நம் குழந்தைகள் நாம் நினைப்பதை விட மிக வேகமாக கற்றுக்கொள்வார்கள். விளையாட்டின் மூலம் அவர்களே இவை அனைத்தையும் பற்றிக் கற்றுக்கொள்வார்கள். பெரியவர்கள் ஆனதும் Logical reasoning போன்றவற்றிற்கு வடிவங்கள் மற்றும் நிறங்களைக் கற்றுக்கொள்வது  மிக அவசியமானது. 

எழுத்துக்கள் மற்றும் எண்களை எழுத:

உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா நமக்கு எப்படி எழுத கற்றுக்கொடுப்பார்கள் என? 4 லைன் நோட்டில் சிகப்பு மற்றும் நீல நிற கோடுகள் இருக்கும். இந்த சிகப்பு கோட்டிலிருந்து நாம் நீல கொடு வரை எழுத வேண்டும். இப்படி தானே கற்றுக்கொள்வோம் ? முதன் முதலில் எழுதும்போது இப்படித்தான் நாம் ஆரம்பிப்போம். எழுத்துக்களை சொல்லிக்கொடுக்கும் போது, வட்ட வடிவத்திலிருந்து நேராக கோடு போடுங்கள். இப்படி ஆரம்பித்தோம் அல்லவா? ஞாபகம் வந்ததா ? எழுத்துக்கள் மற்றும் எண்களை எழுத, வடிவங்கள் மற்றும் நிறங்களைக் கற்றுக்கொள்வது அவசியம். 

எப்பொழுது ஆரம்பிக்க வேண்டும் ?
 இது உங்கள் குழந்தைகளைப்  பொருத்து வேறுபடும். 18 மாதம் வரை நிறைய குழந்தைகளுக்கு நிறங்களை வேறுபடுத்தத் தெரியாது., அதே நேரத்தில் தான் அவர்கள் வடிவங்கள் மற்றும் அமைப்புகளைப் பற்றியும் கற்றுக்கொள்வார்கள். 3 வயதில் அவர்கள் வடிவங்கள், நிறங்களை  முழுதாக வேறுபடுத்த கற்றுக்கொள்வார்கள். நிறபேதமும் அவர்களுக்கு தெரிய வரும். அதாவது இது dark ஆகா உள்ளதா இல்லை light ஆகா உள்ளதா என்பன.

நிறங்கள் மற்றும் வடிவங்களைத் தெரிந்து கொள்ளுதல் என்பது அவர்களின் அறிவு சார்ந்த வளர்ச்சிக்கு ஒரு மைல்கல் எனக் கூறலாம்.

என்னுடைய Youtube வீடியோவில் நிறங்கள் மற்றும் வடிவங்களின் தமிழ் பெயர்களை பதிவு செய்துள்ளேன். கண்டு மகிழுங்கள் . உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்.

































Comments