சமூக வளர்ச்சியின் அவசியம் என்ன ?


வளர்ச்சி என்பது நம் குழந்தைகளின் உடல் ரீதியாக மட்டும் நிகழ்வதில்லை. அறிவு சார்ந்து வளர்கிறார்கள் , உணர்ச்சி சார்ந்து வளர்கிறார்கள் ! இது மட்டுமல்லாமல் ஒரு குழந்தை முழுமையாக எப்போது வளர்கிறார்கள் என்றால் அவர்களின் சமூக வளர்ச்சி எப்போது வருகிறதோ அப்போதுதான். 

சமூக வளர்ச்சி என்றால் என்ன ?

குழந்தைகள் பிறந்தவுடன் தாயிடம் மட்டுமே பேசிக்கொண்டிருப்பார்கள். அதுவும் சிறு கூ, ஆ, ஊ,.. பின்னர் மெதுவாக குடும்பத்தினருடன் உரையாடுவார்கள். அதன் பின்னர் கொஞ்சம் வளர்ந்ததும் வெளி மனிதர்களை சந்திப்பார்கள், அவர்களிடம் உரையாட ஆரம்பிப்பது தான் சமூக வளர்ச்சியின் முதல் படி .

பள்ளி செல்லும் குழந்தைகள்  முதலில் வெளி மனிதர்களை கண்டு பயப்படுவார்கள்.அழுவார்கள். ஆனால் சில நாட்கள் கழித்து அனைத்தும் சரி ஆகிவிடும். அதன் காரணம் அவர்கள் சமூகத்தில் தங்களையும் ஒரு அங்கமாக கலந்து கொள்ள பார்க்கிறார்கள்.

இந்த வளர்ச்சி ஏன் முக்கியம்?

நம் குழந்தைகளின் சமூக வளர்ச்சி எவ்வளவு முக்கியம் என்றால் அவர்கள் குழந்தைகளாக இருந்து பெரிய மனிதர்கள் ஆகும் வரை அனைவரிடமும் தயக்கம் இல்லாமல் பேச துணிவைக் கொடுக்கும். உதாரணத்திற்கு பள்ளியில் சக மாணவனுடன் பழகுவதற்கும் கற்பதற்கும் இந்த வளர்ச்சி தேவை. 

அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு 

மொழி வளர்ச்சி அடையும் 
தன்னம்பிக்கை அதிகரிக்கும் 
கற்கும் திறன் அதிகரிக்கும்.

பெற்றோராக நாம் என்ன செய்ய வேண்டும் ?
 
பிறந்த குழந்தை முதல் இரண்டு வயது வரை நாம் அவர்கள் செய்யும் சிறு சத்தத்திற்கு கூட பதில் கொடுக்க முயல வேண்டும் . 

வெளியில் அழைத்துச் சென்று வெளியுலகத்தை காட்ட வேண்டும்.

இரண்டு வயதுக்கு மேல் : 

பள்ளிக்கு (Playhome ) அழைத்துச் செல்லலாம்.

புதிய மனிதர்களிடம் பேச வைக்கலாம் 

அவர்களின் உணர்ச்சிகளை ஒப்புக்கொள்ள வேண்டும்.


உங்கள் குழந்தைகளின் சமூக ரீதியான வளர்ச்சியில் பெற்றோராக நீங்கள் அவர்களுக்கு அதிகமாக பேச வாய்ப்பளியுங்கள். அதனால் பெரியவர்களானதும் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


Subscribe to our Youtube channel:


For stories and rhymes:


Instagram:












Comments